வணக்கம் தமிழா!
என் அன்பான தோழமைகளே! என் பாசமிகு தமிழ் சமூகமே! தமிழும் தமிழ் சார்ந்த வலைமனையாக இதை நான் பதிவு செய்வதில் பேருவகை அடைகிறேன். இந்த மனை, யான் எழுதித் தொகுத்து வெளியிட்ட ஒரு சிறிய கவிதைத் தொகுப்பான "ஒரு கருவறையின் அறுவடை" என்ற நூலில் உள்ள கவிதைகளின் மின்பதிவு மனை. இதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கவிதைகள், ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகளின் வடிகால். கவிதைகள் மனிதனை வளர்க்கின்றன; கவிதைகள் மனிதனை சிந்திக்கவைக்கின்றன; அவை மனிதனை மனிதனாக்குகின்றன...
கவிதைகள், ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகளின் வடிகால். கவிதைகள் மனிதனை வளர்க்கின்றன; கவிதைகள் மனிதனை சிந்திக்கவைக்கின்றன; அவை மனிதனை மனிதனாக்குகின்றன...
என்னை அவ்வப்போது கவிதைகள் எழுதவைக்க காரணமாயிருந்த அனைவருக்கும்... அனைத்துக்கும்... என் மனமார்ந்த நன்றிகள் -
முத்தமிழ் மன்றம்
(மூகாம்பிகை பொறியியல் கல்லூரி)
திருச்சி வானொலி நிலையம்
குருகுலத் தென்றல் - மாத இதழ்
புதிய மாற்றம் - மாத இதழ்
"கவிதைகள் எழுத... எழுத...
என்னை விட்டுச் செல்கிறது மரணம்"
சிநேகத்துடன்,
விமலன்